News August 30, 2024
சூரிய சக்தி மின் உற்பத்தியில் பங்கேற்க அழைப்பு

மாசு இல்லாத மின்சாரத்தை உருவாக்கும் சோலார் மின் உற்பத்திக்கு மின்வாரியம் முக்கியத்துவம் அளிக்கிறது. சோலார் மின் உற்பத்தி பேனர்கள் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் செயல்படுத்தி வருவதால், இதன் மூலம் மின் உற்பத்தி ஒவ்வொரு வாரமும் சாதனை படைத்து வருகிறது. 1 கிலோ வாட் சோலார் பேனல் மூலம் தினமும் நான்கு முதல் ஐந்து யூனிட் மின்சக்தியை உருவாக்க முடியும் என நெல்லை மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Similar News
News July 7, 2025
நெல்லை: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/1)

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில். நெல்லைக்கு 45 காலிப் பணியிடங்கள் உள்ளது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும். இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்: ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண். <<16974235>>மேலும் அறிய<<>>
News July 7, 2025
நெல்லை: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/2)

▶️விண்ணப்பதாரர்களுக்கு திறனறிவு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்படும்.
▶️அனைவரும் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
▶️மேலும், தேர்வர்கள் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️ விவரங்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலகம் மற்றும் அருகேயுள்ள தாலுகா அலுவலகத்தை நேரில் அணுகலாம்.
News July 7, 2025
சொத்து தகராறில் பஞ்சாயத்து தலைவிக்கு அரிவாள் வெட்டு

களக்காடு அருகே உள்ள சேதுராயபுரத்தை சேர்ந்த சாமுவேல் மற்றும் இவரது சகோதரர் லட்சுமணபாண்டிக்கு இடையே பூர்வீக சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. நேற்று (ஜூலை.06) இரு குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனை தடுக்க முயன்ற சீவலப்பேரி பஞ்சாயத்து தலைவி அய்யம்மாள் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.