News August 30, 2024
Wow.. ஸ்க்ரீன் ஷாட்டுக்கு சூப்பர் Hack

ஆண்டிராய்டு போன்களை ஒப்பிடுகையில், ஐபோன்களை புதிதாக பயன்படுத்துபவர்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க திணறுவார்கள். உங்கள் ஐபோனில் Setting-க்குள் சென்று Accessibility என்பதை தேர்ந்தெடுங்கள். அதில் Touch-க்குள் சென்று Back Tap-ஐ செலக்ட் செய்து Double Tap அல்லது Triple Tap-இல் Screen Shot-ஐ Assign செய்திடுங்கள். இப்போது போனின் பின்னால் இரு முறை தட்டினாலே ஸ்க்ரீன் ஷாட் எடுத்துவிடும்.
Similar News
News July 8, 2025
திருச்செந்தூருக்கு 5 லட்சம் பக்தர்கள் வருகை: சேகர் பாபு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. நிகழ்வுக்கு பின் பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, சுமார் 5 லட்சம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலுக்கு வருகை தந்ததாகவும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறினார். திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா என்பது பக்தர்கள் மாநாடு, பா.ஜ.க.வினரின் மாநாடு அல்ல என்றார்.
News July 8, 2025
அரசு கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கை: அமைச்சர்

அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவிகிதம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். உயர்கல்வியில் சேர திரளான மாணவர்கள் காத்திருக்கிறார்கள் என அறிந்த CM ஸ்டாலின், அரசு உதவி பெறும் கலை & அறிவியல் கல்லூரிகளில் 15 சதவிகிதமும், சுயநிலை கலை & அறிவியல் கல்லூரிகளில் 10 சதவிகிதமும் கூடுதலாக உயர்த்த உத்தரவிட்டிருக்கிறார் என கோவி.செழியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News July 8, 2025
வரலாற்றில் இன்று

1099 – முதலாம் சிலுவைப் போர். 15,000 கிறித்தவப் போர் வீரர்கள் பட்டினியுடன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்து, நகரினூடாக சமய ஊர்வலம் சென்றனர். 1497 – வாஸ்கோ டோ காமாவின் இந்தியாவுக்கான முதல் ஐரோப்பிய நேரடிப் பயணம் ஆரம்பித்தது. 1879 – அமெரிக்காவின் ஜென்னெட் என்ற கப்பல் தனது கடைசி ஆய்வுப் பயணத்தை வட துருவம் நோக்கி ஆரம்பித்தது. 2003 – சூடான் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 117 பேர் உயிரிழந்தனர்.