News August 29, 2024
ஆங்கிலம் அறிவோம்: Advocate vs Lawyer

Advocate என்பவர் சட்டம் படித்து விட்டு, பார் கவுன்சிலால் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிமன்றத்தில் வாதாடும் வழக்குரைஞர். Lawyer அதாவது வழக்கறிஞர் என்பவர் சட்டம், வழக்கு பற்றி அறிந்தவர். அவரால் நீதிமன்றத்தில் வாதாட முடியாது. உதவி தேவைப்படும் தனிநபர், நிறுவனங்களுக்கு சட்ட ரீதியான அறிவுரைகள் வழங்குவது, ஆவணங்கள் தயார் செய்வது அவர்களின் பணி. தகவல் பிடித்தால் லைக் பண்ணுங்க. #English
Similar News
News August 21, 2025
பேரறிஞர் அண்ணா பொன்மொழிகள்

*உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன். வாழ்த்துகுரியவன். அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுத்துவது சமுதாயத்தின் நல்வாழ்வையே புரையேறச் செய்வதாகும்.
*போட்டியும், பொறாமையும், பொய் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே.
*சமத்துவம், சமதர்மம் போன்ற லட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம்
News August 21, 2025
விஜயை குறிவைக்கிறாரா சீமான்?

கடந்த காலங்களில் திமுகவை கடுமையாக விமர்சித்த வந்தார் சீமான். ஆனால் மு.க.முத்து மறைவுக்கு ஸ்டாலினிடம் நேரில் ஆறுதல் தெரிவித்த பின், திமுகவை அவர் விமர்சித்தாலும், தவெகவுடன் ஒப்படுகையில் குறைவு என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உதாரணத்துக்கு ‘அணிலே, அணிலே ஓரம் போ அணிலே’ என்ற விமர்சனம் இணையத்தில் வைரல். இதற்கு TVK தொண்டர்கள் சோசியல் மீடியாவில் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 21, 2025
CPR-க்கு தமிழக கட்சிகள் ஆதரவு தாருங்கள்: அண்ணாமலை

தமிழக அரசியல் கட்சிகள் CPR-க்கு ஆதரவு தர வேண்டுமென அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், CM, PM குற்றம் புரிந்தால் பதவிநீக்கம் செய்வதற்கான மசோதா குறித்து பேசிய அவர், மத்திய அரசால் தற்போது கொண்டு வரப்படும் புதிய சட்டம் வரவேற்கத்தக்கது என்றார். இச்சட்டத்தால் தவறு செய்தவர்கள் சிறைக்கு செல்வர் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் ஏற்படும் என்றார்.