News August 29, 2024
ஏ.ஜி. நூரனி காலமானார்

மிகச் சிறந்த அரசியல் வல்லுநரும், வழக்குரைஞருமான ஏ.ஜி. நூரனி இன்று காலமானார். பல்வேறு புகழுக்கு சொந்தகாரரான அவர், பாபர் மசூதி தீர்ப்பு குறித்து புத்தம் ஒன்றை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், உயிரிழந்தார். காஷ்மீர் விவகாரம், இந்தியா – சீனா விவகாரம் உட்பட பல தலைப்புகளின்கீழ் புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது மறைவிற்கு கனிமொழி, ரவிக்குமார், சரத் பவார், சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News July 8, 2025
U19 ODI: இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான U19 ODI போட்டியில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்தியாவில், அம்பிரீஷ்(66) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் 210 ரன்களை மட்டுமே இந்தியா சேர்த்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்தில், பென் மேயஸ் 82 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆனால் தொடரை இந்தியா 3-2 என கைப்பற்றியது.
News July 8, 2025
கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் அதிகமா?

இதே வேகத்தில் போனால், 2050-க்குள் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் அதிகமாக இருக்கும் நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஆம், நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் 85 சதவீதம், நிலம் (அ) கடலில் எறியப்படுகிறது. இவை கடலையும், காற்றையும் மாசுப்படுத்துகின்றன. மேலும், மீன்களின் உடலிலும் சேர்வதால், அவற்றை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்களை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக்கை தவிர்க்கலாமே!
News July 7, 2025
மாமியாரை கர்ப்பமாக்கிய மருமகன்… விநோதம்!

இந்தோனேசியாவில் இந்த விநோத சம்பவம் நடந்துள்ளது. 21 வயது மனைவியுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திவந்த நபர், திடீரென விவாகரத்து செய்துள்ளார். மாமியாரின் வயிற்றில் இவரின் குழந்தை வளர்வது தெரிய வந்ததால் ஏற்பட்ட குடும்ப சிக்கலே இதற்கு காரணம். மனைவிக்கு இப்போது இவர் வளர்ப்பு தந்தை. இதனால் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, மாமியாரை திருமணம் செய்துகொண்டார். இப்போது குழந்தையும் பிறந்துவிட்டதாம்.