News August 29, 2024

வள்ளுவர் கோட்டம் மேம்பாலம் கட்டும் பணி நிறுத்தி வைப்பு

image

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், வள்ளுவர்கோட்டத்தில் மேம்பாலம் கட்டும் பணியை மெட்ரோ ரயில் பணி மற்றும் நிலம் கையகப்படுத்தி முடிக்கும் வரை நிறுத்தி வைக்கவும், நிலம் கையகப்படுத்த தேவையான நிதியை தவிர்த்து மீதமுள்ள நிதியை மாநகராட்சியின் மற்ற மேம்பாலம் கட்டும் பணிக்கு பயன்படுத்தவும் தீர்மானம் இயற்றப்பட்டது.

Similar News

News September 17, 2025

சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

image

சென்னையில் இருந்து 165 பயணிகளுடன் நேற்று இரவு பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்தில் நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட நிலையில், அவசர அவசரமாக விமானம் மீண்டும் சென்னையில் தரையிறங்கியது. உடனடியாக மாற்று விமானம் ஏற்பாடு செய்து பயணிகள் பெங்களூருக்கு செல்ல அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பயணிகள் செல்ல தாமதம் ஏற்பட்டது.

News September 17, 2025

சென்னையில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

image

சென்னை மாவட்டத்தில் நேற்று (செப் 16) காலை 8:30 முதல் இன்று காலை 6:30 மணி வரை தாலுகா வாரியாக அயனாவரம் – 17, எழும்பூர் – 19.9, கிண்டி – 9.6, மாம்பலம் – 34.8, மயிலாப்பூர் – 82.6, பெரம்பூர் – 32.3, புரசைவாக்கம் – 26.4, தண்டையார்பேட்டை – 23.4, ஆலந்தூர் 1.2, அம்பத்தூர் – 35, சோழிங்கநல்லூர் – 6.7 என மி.மீட்டரில் மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

News September 17, 2025

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு..?

image

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி, சென்னையில் இன்று(செப்.17)ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 க்கும், டீசல் ரூ.92.39 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையானது காலை 6.00 மணிக்கு அமலில் வந்தது.

error: Content is protected !!