News August 29, 2024

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணியிடங்கள்

image

தேனி மாவட்டத்தில் 6 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 27 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 41 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணியிடங்கள் 90 சதவீதம் காலியாக உள்ளது. இதனால் நோயாளிகள் மருந்து மாத்திரை பெற சிரமம் ஏற்படுகிறது. எனவே  மருந்தாளுனர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News July 6, 2025

10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

image

தேனி மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் <>இந்த லிங்க் மூலம் <<>>ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஜூலை 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க மத்திய அரசு வேலையை வாங்குங்க.

News July 6, 2025

தேனியில் கிணற்றில் பிணமாக கிடந்த கூலித்தொழிலாளி

image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள அரப்படிதேவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ்(60). தேவதாஸ் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் அதே கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடலை க.விலக்கு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News July 5, 2025

மனை வைச்சீருக்கீங்களா இதலாம் சரி பாருங்க!

image

தேனி மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு தேனி மாவட்டத்தில் உள்ள சார்- பதிவாளர் அலுவலகத்தை நேரடியாக தொடர்புகொண்டு விவரங்களை பெற்று கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!