News August 29, 2024
வெளிநாட்டு பெண்ணை மணந்த முதல் இந்திய அரசர்

புதுக்கோட்டையின் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் தான், வெளிநாட்டு பெண்ணை மணந்த முதல் இந்திய அரசர். இவர் ஆஸி. பெண் மோலி ஃபிங்கை கடந்த 1915ஆம் ஆண்டு கரம்பிடித்தார். வாரிசு பிரச்னை காரணமாக, இந்திய அரசர்கள் ஆங்கிலேயப் பெண்களை முதல் திருமணம் செய்யக்கூடாது என்பது பிரிட்டிஷ் கொள்கை. அதை மீறியதற்காக பல்வேறு இன்னல்களுக்குள்ளாக நேரிட்டதால் அவர், ஃபிரான்ஸ் நாட்டிற்கு குடிபெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.
Similar News
News July 7, 2025
பெருங்கவிக்கோ உடல் குண்டுகள் முழங்க நல்லடக்கம்..!

மூத்த தமிழறிஞரான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 4-ம் தேதி உயிரிழந்த அவரது உடலுக்கு CM ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யவும் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், 30 குண்டுகள் முழங்க சேதுராமனின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. RIP
News July 7, 2025
2010 முதல் விலையே மாறாது Parle G-யின் ரகசியம் தெரியுமா?

எவ்வளவு விலைவாசி உயர்வுகள் வந்தாலும், Parle G விலை மட்டும் எப்படி விலை உயரவே இல்லை என்ற டவுட் பலருக்கும் உண்டு. விலைக்கு பதிலாக, நைசாக வேறொரு வழியில், விலைவாசி உயர்வை கையாண்டு வருகிறது Parle G நிறுவனம். 2010-ல் ₹5-க்கு 60 கிராம் பிஸ்கட் பாக்கெட் விற்கப்பட்டது. ஆனால், அது 2015-ல் 50 கிராமும், 2018-ல் 38 கிராமும், 2020-ல் 33 கிராமும், தற்போது 30 கிராமும் வழங்கப்படுகிறது. ஆனால் விலை ₹5 தான்.
News July 7, 2025
நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(ஜூலை 8) விடுமுறையாகும். இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT.