News August 29, 2024
மனித குலத்தை அழிக்க வந்த பேரழிவு ஆயுதம்

ஜப்பானில் 2.30 லட்சம் மக்களின் (கதிர்வீச்சு) உயிரிழப்புக்கு அணு ஆயுதம் எனும் பேரழிவே மூலக் காரணமாகும். இத்தகைய அழிவு அறிவியல் கண்டுபிடிப்பான அணு ஆயுத உற்பத்தியை தடுக்க அணு ஆயுத சோதனை எதிர்ப்பு நாள் ஆக. 29இல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1996இல் ‘PTBT ஒப்பந்தம்’ ஏற்படுத்தப்பட்டாலும், முழு அளவில் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இஸ்ரேல்-ஈரான் மோதல் வெடித்துள்ள நிலையில் இது குறித்து ஐ.நா கவனம் செலுத்துமா?
Similar News
News August 21, 2025
‘குஷ்பு இட்லி’ என பெயர் வர இதுதான் காரணம்: குஷ்பு

‘குஷ்பு இட்லி’ என்ற பெயர் பிரபலமாக யார் காரணம் என்ற விவரத்தை குஷ்பு பகிர்ந்துள்ளார். ஒரு படத்தின் ஷூட்டிங்கின் போது, நடிகர் பிரபு தனது கன்னத்தை பிடித்து அப்படியே இட்லி மாதிரி இருக்கு என கூறியதாகவும், அப்போது முதல் அந்த வார்த்தை பிரபலமானதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், அந்த டயலாக்கே அப்படத்தில் இல்லை எனவும், பிரபு எதார்த்தமாக அப்படி சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
நாளை இதை செய்ய மறக்காதீங்க

நாளை (வியாழக்கிழமை) குரு புஷ்ய யோக தினமாகும். குருவுக்குரிய வியாழக்கிழமையும், பூச நட்சத்திரமும் எப்போது இணைகிறதோ அந்த நாளே குரு புஷ்ய யோக நாள். அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் பல்கிப் பெருகும் என்ற நம்பிக்கை எவ்வாறு உள்ளதோ, அதைவிட சிறந்த நாளாக குரு புஷ்ய யோக நாளை கருதுகின்றனர். இந்த நாளில் மஞ்சள் நிற பொருள்கள் வாங்குவதை மறக்காதீங்க.
News August 20, 2025
இன்ஃபோசிஸ் அறிவித்த 80% போனஸ்.. யாருக்கு கிடைக்கும்?

இன்ஃபோசிஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. PL – Performance Level 6 மற்றும் அதற்கு கிழே உள்ள இளநிலை, மத்திய நிலை ஊழியர்களுக்கு சராசரியாக 80% போனஸ் வழங்கப்பட உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் காலாண்டு நிதி அறிக்கை வெளியான நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 8.7% அதிகரித்து ₹6,921 கோடியாகவும், வருவாய் 7.5% அதிகரித்து ₹42,279 கோடியாகவும் உயர்ந்துள்ளன.