News August 29, 2024
காதலி இறந்த துக்கத்தில் காதலன் தூக்கிட்டு தற்கொலை

பெரியாண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவி. இவர், அதேப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண், கடந்த ஒரு வாரத்திற்கு முன் உடல்நிலை பாதித்து உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சஞ்சீவி, நேற்றிரவு தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 29, 2025
விழுப்புரம்; விவசாயிகளுக்கு கடைசி வாய்ப்பு

விழுப்புரம் மாவட்டத்தில், காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார். நிலக்கடலை மற்றும் கம்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் ஆகஸ்ட் 30-க்குள் காப்பீடு செய்யலாம். நிலக்கடலைக்கு ஏக்கருக்கு ரூ.623.75 பிரீமியம் செலுத்தினால், காப்பீட்டு தொகை ரூ.31,187.37 கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். SHARE
News August 29, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.29) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காங்கேயனூர்
▶️ சோலை வாழியம்மன் கோயில், கூடுவாம்பூண்டி
▶️ ஜெயபாரதி மண்டபம், கொத்தனூர்
▶️ வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், கோலியனூர்
▶️ வேதா உயர்நிலைப் பள்ளி, கோட்டக்குப்பம்
▶️ குஷால் சந்த் பள்ளி வளாகம், திண்டிவனம்
பொதுமக்கள் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். SHARE
News August 29, 2025
விழுப்புரம் திமுக நிர்வாகி தந்தை காலமானார்

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளரும், விழுப்புரம் முன்னாள் நகர சபை தலைவருமான ரா.ஜனகராஜ் அவரது தந்தை தா.ராஜாமணி (94) நேற்று(ஆக.28) இரவு வயது மூப்பு காரணமாக உயிர் இழந்தார். அவரது மறைவுக்கு திமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான க.பொன்முடி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.லட்சுமணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.