News August 29, 2024

காேழியை விழுங்கிய மலைப்பாம்பு

image

பொன்னமராவதி அருகே பாண்டிமான் நகரை சேர்ந்தவர் கவிதா. இவரது வீட்டின் அருகே கோழியை விழுங்கிய நிலையில், 10 அடி நீள மலைப்பாம்பு கிடந்தது. இதை கண்டு அச்சமடைந்த பகுதி மக்கள் அச்சமடைந்து தெறித்து ஓடினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி தீயணைப்பு வீரர்கள் 10 அடி நீள மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News November 6, 2025

புதுகை: தந்தை திட்டியதால் மகன் தற்கொலை

image

மழையூர் கீழப்பட்டி சேர்ந்த 17 வயது இளைஞர், வம்பன் வேளாண்மை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். தந்தை அமரேசன் செல்போன் பார்க்காதே என (நவ.3) கண்டித்து செல்போனை பறித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்து வீட்டை விட்டு வெளியேறிய இளைஞர், நேற்று அந்த பகுதியில் கிணற்றில் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய மழையூர் போலீசார் விசாரணை செய்கினர்.

News November 6, 2025

புதுகை: ரேஷன் குறைதீர் முகாம் அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்தில் குடும்ப அட்டைகள் நியாயவிலை கடை தொடர்பான குறைதீர்க்கும் முகாம், அந்தந்த தாலுகா அலுவலகங்களில் தொடர்புடைய தனி தாசில்தார் முன்னிலையில் (09.11.2025) காலை 10 மணி முதல், மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை பெறுதல் உள்ளிட்ட மனுக்களை பதிவு செய்து பயன்பெற கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News November 6, 2025

புதுகை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE IT NOW…

error: Content is protected !!