News August 29, 2024
நாமக்கல்லில் 4 இடங்களில் அனுமதி

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர் ச.உமா தலைமையில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர், பரமத்தி வேலூர் ஆகிய நான்கு இடங்களில் உள்ள ஆற்றுப்பகுதிகளில் படித்துறைகளில் மட்டுமே சிலைகள் கரைக்க அனுமதி வழங்கியுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News November 15, 2025
நாமக்கல் கிட்னி விற்பனை வழக்கில் திடீர் திருப்பம்!

கிட்னி விற்பனை வழக்கில் புரோக்கர்கள் ஆனந்தன், ஸ்டாலின் மோகன் இருவரையும் சிறப்பு புலனாய்வு குழு வினர் கடந்த, 11ம் தேதி பள்ளிப்பாளையம் அருகே கீழ்காலனி பகுதியில் உள்ள பயணியர் விடுதியில் வைத்து, கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தினர். இதில், கிட்னி புரோக்கர்கள் தெரிவித்த தகவல் படி, அன்னை சத்யா நகரை சேர்ந்த முத்துசாமி, 45, என்ற கிட்னி புரோக்கரை சிறப்பு புலனாய்வு போலீசார் நேற்று கைது செய்தனர்.
News November 15, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
நாமக்கல்லில் 58-வது தேசிய நூலக வார விழா!

நாமக்கல் மாவட்ட மைய நூலகம் மற்றும் மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 58-வது தேசிய நூலக வார விழா, வரும் (16-11-2025) ஞாயிற்றுக்கிழமை அன்று, நாமக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், கோட்டை நகரவை உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் தேன்மொழி தலைமை வகிக்க உள்ளார். நல்லாசிரியர் விருது பெற்ற முதுகலை தமிழாசிரியர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்ற உள்ளார்.


