News August 28, 2024
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சம்பாய் சோரன்

சம்பாய் சோரன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார். கட்சியில் இருந்து விலகினாலும் மக்களுக்கான தனது போராட்டம் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக.30இல் அவர் பாஜகவில் இணையவுள்ள நிலையில், தற்போது தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Similar News
News August 17, 2025
ரெய்டில் சிக்கவுள்ள அடுத்த அமைச்சர்கள் யார் யார்?

அமைச்சர் ஐ.பி.,க்கு சொந்தமான இடங்களில் ED சோதனை நடக்கிறது. ரெய்டில் இன்னும் பல அமைச்சர்கள் சிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தென் பகுதியில் இந்த ரெய்டு ஒரு புயலை கிளப்புமாம். அதாவது, அமைச்சர்கள் மூர்த்தி(மதுரை), KKSSR.ராமச்சந்திரன் (விருதுநகர்), பெரியகருப்பன்(சிவகங்கை) ஆகியோர் இந்த பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ரெய்டு தி.மலையில் என EPS கூறியதால் வேலுவும் பட்டியலில் இருக்கலாம்.
News August 17, 2025
‘கூலி’யால் பின்வாங்கும் மதராஸி

கிடைக்கும் யூடியூப் சேனல்களில் எல்லாம் நேர்காணல்கள், ஆடியோ லாஞ்ச்சில் துதிபாடல்கள், அல்டிமேட் ஸ்டார் காஸ்ட் என பல இருந்தும் சரியான திரைக்கதை இல்லாததால் ‘கூலி’ கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், செப்.5-ல் ரிலீஸாகவுள்ள ‘மதராஸி’ படத்துக்கு அதிக புரமோஷன் செய்து ரசிகர்களுக்கு தேவையில்லாத எதிர்பார்ப்பை அளிக்கப் போவதில்லை என AR முருகதாஸ் கூறியுள்ளார். வெற்றி பெறுவாரா SK?
News August 17, 2025
ஓரங்கட்டப்படும் அன்புமணி.. மகளுக்கு முக்கியத்துவம்?

பாமகவின் சிறப்பு பொதுக்குழு இன்று(ஆக., 17) நடக்கவிருக்கிறது. இதில் ராமதாஸ் அதிரடி தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ராமதாஸ் அறிவித்திருந்த அன்புமணியின் செயல் தலைவர் பதவி பறிக்கப்படவுள்ளதாகவும், அனைத்து அதிகாரமும் நிறுவனர் ராமதாஸுக்கு மட்டுமே என விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட இருக்கிறதாம். மூத்த மகள் காந்திமதிக்கு முக்கிய பொறுப்பு வழங்க வாய்ப்பிருக்கிறது.