News August 28, 2024
கொளத்தூர் தாலுகா பரப்பளவு எவ்வளவு?

<<13962822>>கொளத்தூர்<<>>, பெரவள்ளூர், சிறுவள்ளூர், ஆகிய 3 வருவாய் கிராமங்களை தனது ஆட்சி எல்லைகளாக கொண்டு கொளத்தூர் தாலுகா செயல்படும். 3,78,168 பொதுமக்கள் வசிக்கும் 6.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது கொளத்தூர் தாலுகா. புதிய தாலுகா உருவாக்கப்பட்டதால், பொதுப் பிரிவு, சமூக பாதுகாப்பு பரிவு, நகர்ப்புற நிலவரித் திட்டம், வட்ட கலால் அலுவலகம், நில அளவை பிரிவு உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
Similar News
News August 17, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

1. மிகவும் லேசான வாயு எது?
2. வாக்காளர்களுக்கு முதல்முதலாக அடையாள அட்டை வழங்கிய இந்திய மாநிலம் எது?
3. குறைந்த வயதில் பத்ம பூஷண் விருது பெற்றவர் யார்?
4. கர்நாடக இசையில் சோகத்தை குறிக்கும் ராகம் எது?
5. கை உண்டு விரல்கள் இல்லை. கழுத்து உண்டு தலை இல்லை அது என்ன?
விடைகள் மதியம் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
News August 17, 2025
₹300 கோடி கிளப்பில் இணைந்த ‘கூலி’

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வசூல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தபோதும், அதை முறியடித்து மூன்றே நாளில் ₹320Cr+ வசூலித்துள்ளது. இதன்மூலம் ரஜினியின் திரைத்துறை வாழ்க்கையில் 3 நாளில் ₹300cr வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. ஜெயிலர் 3 நாளில் ₹224Cr+ வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
News August 17, 2025
2026 தேர்தலில் திமுக ஏமாந்து போகும்: அரசு ஊழியர்கள்

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி, 2021 தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இது நிறைவேற்றப்படாததால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், மீண்டும் வாக்குறுதியை மட்டுமே அளித்து 2026 தேர்தலில் வெல்லலாம் என நினைத்தால் ஏமாந்து போவார்கள் என அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.