News August 28, 2024
ஆக.31இல் ரேஷன் பொருட்கள் பெறலாம்

ஆக.31ஆம் தேதி நியாய விலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக மாதத்தில் இறுதிப்பணி நாளில் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. ஆனால், இம்மாதத்திற்கான பொருட்களை பலர் பெறவில்லை என்பதால், அனைத்து அட்டைதாரர்களுக்கும் தடையின்றி பொருட்கள் கிடைக்கும் நோக்கில் ஆக.31இல் ரேஷன் பொருட்களைப் பெறலாம் எனக் கூறியுள்ளது.
Similar News
News July 7, 2025
உலக போர் வரலாம்… மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

உக்ரைன் & மத்திய கிழக்கில் நடந்து வரும் போர்களை சுட்டிக்காட்டி, எப்போது வேண்டுமானாலும் உலக போர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், வல்லரசுகளின் சர்வாதிகார போக்கால், நாடுகளிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அன்பு குறைந்து வருவதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
News July 7, 2025
சர்வதேச சந்தையில் மீண்டும் இறங்குமுகத்தில் தங்கம்

USA சந்தையில் கடந்த வாரத்தில் ஏறுமுகத்திலிருந்த தங்கம் இன்று(ஜூலை 7) இறங்கு முகத்தை கண்டுள்ளது. 1 அவுன்ஸ்(28 கிராம்) 19 டாலர்கள்(₹1,623) குறைந்து 3,319 USD-க்கு விற்பனையாகிறது. அமெரிக்க சந்தையில் தற்போதைய நிலை நீடிப்பதோடு, இந்தியப் பங்குச்சந்தைகளும் உயர்வைக் கண்டால் தங்கம் விலை இன்று சரிய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். குறையுமா என்பதை 9.30 மணி வரை பொறுத்திருந்து பார்க்கலாம்
News July 7, 2025
பணத்தை மிச்சப்படுத்தும் 50:30:20 ரூல்!

பணத்தை ஓடி ஓடி சம்பாதிப்பதை போல, சேமிப்பதிலும் கவனம் வேண்டும். உங்களின் வருமானத்தை 50:30:20 விதிப்படி ஒதுக்குவது நல்லது *50% அத்தியாவசிய தேவைகளுக்கு *30% தேவைகளுக்கும், சுற்றுப்பயணங்களுக்கும் *20% சேமிப்புகளுக்கு *ஒரு பெஸ்ட் ஃப்ரீ அட்வைஸ், ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று தோன்றினால், ஒரு 24 மணி நேரம் காத்திருங்கள். பிறகு யோசியுங்கள் அது தேவையா என்று, உங்களுக்கு பதில் கிடைக்கும்.