News August 28, 2024
whatsapp தகவலால் ரூ.18 லட்சம் இழந்த இளைஞர்

நெல்லை பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(32). இவர் கடந்த 16ஆம் தேதி பகுதி நேர வேலைக்காக தனது whatsapp எண்ணிற்கு வந்த தகவலை நம்பி செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபரின் அறிவுறுத்தல்படி, பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூ.18,17,500 அனுப்பியுள்ளார். பின்னரே, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மணிகண்டன் புகாரின் பேரில் மாநகர சைபர் கிரைம் போலீசார் நேற்று(ஆக.,27) வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News September 10, 2025
நெல்லை: சுய உதவிக் குழு பெண்களுக்கான வேலை வாய்ப்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு; சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் காலியாக உள்ள சமுதாய வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு பணியாளராக பணி அமர்வு செய்திட தகுதியான சுய உதவி குழுக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு 0462-2903302, 7708678400 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
News September 10, 2025
நெல்லை ஆசிரியர்களுக்கு கடைசி வாய்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) வருகிற நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் 8ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வரை நீட்டிப்பு செய்துள்ளது. மாலை 5 மணிக்குள் விருப்பமுள்ள நெல்லை மாவட்ட ஆசிரியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். *ஷேர்
News September 10, 2025
கவின் கொலை வழக்கு – மூவருக்கு காவல் நீட்டிப்பு

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில் கைதான் சுர்ஜித் அவரது தந்தை சரவணன் உள்பட மூவரின் நீதிமன்ற காவல் நேற்று 9ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பாளை மத்திய சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிபதி ஹேமா மூவருக்கும் 15 நாட்கள் காவல் நீட்டித்தார். அதன்படி வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.