News August 28, 2024
வைகை அணையில் பாசனத்திற்கு தண்ணீர் மீண்டும் திறப்பு

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் போக பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று காலை முதல் பாசனத்திற்கான தண்ணீர் 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் குடிநீருக்காக 69 கன அடி தண்ணீர் என மொத்தம் 869 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது
Similar News
News November 10, 2025
தேனி: சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்; கிராம மக்கள்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியில் மனமகிழ் மன்ற பார்க்கு அனுமதி வழங்க கூடாது என ஒட்டு மொத்த கிராம மக்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். அப்படி அனுமதித்தால் வரும் 2026ம் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என பெரிய பேனர்களை ஆங்காங்கே வைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
News November 9, 2025
தேனி அருகே ஓட்டுநரை தாக்கி ஆட்டோ திருட்டு

பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவசக்திவேலன். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். தேனி புதிய பஸ் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் உப்பார்பட்டி செல்லவேண்டும் என கூறவே. ஆட்டோவில் சென்று கொண்டி இருந்த போது இடையில் ஆட்டோ டிரைவர் சிவசக்திவேலனை தாக்கி 3பேரும் ஆட்டோவை கடத்தி சென்று விட்டனர். வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
News November 9, 2025
தேனியில் பரவும் குண்டு காய்ச்சல்

தேனி மாவட்டத்தில் தற்போது குளிர் காலம் தொடங்குவதால், சில பசுக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து கால்நடை துறையினர் கூறுகையில், இந்த வகை காய்ச்சல் கொசு மற்றும் ஒரு வித பூச்சி கடியால் ஏற்படுகிறது. கால்களில் குழம்புகளில் முன்னும் பின்னும் குண்டு போன்று ஏற்படும். எனவே இதை குண்டு காய்ச்சல் என்றும் அழைக்கின்றனர். இது 3 நாட்களில் சரியாகி விடும் அச்சம் தேவையில்லை என தெரிவித்தனர்.


