News August 28, 2024
சீர்காழி அருகே இளம்பெண் தற்கொலை

சீர்காழி அருகே அகர எலத்தூரை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி சுகன்யா( 31). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டில் சுகன்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. போலீசார் அவரது உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுகன்யாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
Similar News
News August 15, 2025
மயிலாடுதுறை: சொந்த ஊரில் அரசு வேலை!

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள ’33’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News August 14, 2025
மயிலாடுதுறை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்பத்தாரின் விபரத்தோடு மருத்துவ அடையாள அட்டையை உடனே பதிவு செய்து பெற முடியும். மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம். SHARE IT NOW
News August 14, 2025
விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வல ஆலோசனை கூட்டம்

சீர்காழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் காவல் துறை சார்பில் இன்று நடைபெற்றது. டி.எஸ்.பி அண்ணாதுரை தலைமையில் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் ராஜா அண்ணாதுரை சுகுணா விஜயா முன்னிலை வகித்தனர். விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.வைத்தீஸ்வரன் கோயில் எஸ்ஐ சூரியமூர்த்தி விழா கமிட்டி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்