News August 28, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல்
▶குறள் எண்: 36
▶குறள்: அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை.
▶பொருள்: பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.
Similar News
News August 17, 2025
பாஜகவில் இணையும் திமுக தலைவர்கள்: எல்.முருகன்

திமுகவில் உள்ள மிகப்பெரிய தலைவர்கள் பாஜகவில் இணையவுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன். பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். சில முக்கிய திமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பொறுத்திருந்து பாருங்கள், மிகப்பெரிய மாற்றம் நடக்கப்போகிறது எனக் கூறியுள்ளார். அதிமுக தலைவர்கள் திமுகவில் இணைந்து வரும் நிலையில், எல்.முருகனின் இந்த பேச்சு அரசியல்ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
News August 17, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

1. மிகவும் லேசான வாயு எது?
2. வாக்காளர்களுக்கு முதல்முதலாக அடையாள அட்டை வழங்கிய இந்திய மாநிலம் எது?
3. குறைந்த வயதில் பத்ம பூஷண் விருது பெற்றவர் யார்?
4. கர்நாடக இசையில் சோகத்தை குறிக்கும் ராகம் எது?
5. கை உண்டு விரல்கள் இல்லை. கழுத்து உண்டு தலை இல்லை அது என்ன?
விடைகள் மதியம் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
News August 17, 2025
₹300 கோடி கிளப்பில் இணைந்த ‘கூலி’

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வசூல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தபோதும், அதை முறியடித்து மூன்றே நாளில் ₹320Cr+ வசூலித்துள்ளது. இதன்மூலம் ரஜினியின் திரைத்துறை வாழ்க்கையில் 3 நாளில் ₹300cr வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. ஜெயிலர் 3 நாளில் ₹224Cr+ வசூலித்தது குறிப்பிடத்தக்கது.