News August 27, 2024
ஜெய்ஷாவுக்கு பாண்டியா வாழ்த்து

ஐசிசி தலைவராக பொறுப்பேற்கவுள்ள ஜெய்ஷாவுக்கு ஹர்திக் பாண்டியா வாழ்த்து கூறியுள்ளார். அதில், “நீங்கள் கிரிக்கெட்டை மாபெரும் உயரத்திற்கு கொண்டு சொல்வதை பார்க்க ஆவலோடு உள்ளேன். பிசிசிஐயைப் போலவே உங்களின் நோக்கம் மற்றும் செயல்பாடு ஐசிசியின் வளர்ச்சிக்கு உதவும்” என தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவராக ஜெய்ஷா இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
Similar News
News August 17, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

1. மிகவும் லேசான வாயு எது?
2. வாக்காளர்களுக்கு முதல்முதலாக அடையாள அட்டை வழங்கிய இந்திய மாநிலம் எது?
3. குறைந்த வயதில் பத்ம பூஷண் விருது பெற்றவர் யார்?
4. கர்நாடக இசையில் சோகத்தை குறிக்கும் ராகம் எது?
5. கை உண்டு விரல்கள் இல்லை. கழுத்து உண்டு தலை இல்லை அது என்ன?
விடைகள் மதியம் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
News August 17, 2025
₹300 கோடி கிளப்பில் இணைந்த ‘கூலி’

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வசூல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தபோதும், அதை முறியடித்து மூன்றே நாளில் ₹320Cr+ வசூலித்துள்ளது. இதன்மூலம் ரஜினியின் திரைத்துறை வாழ்க்கையில் 3 நாளில் ₹300cr வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. ஜெயிலர் 3 நாளில் ₹224Cr+ வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
News August 17, 2025
2026 தேர்தலில் திமுக ஏமாந்து போகும்: அரசு ஊழியர்கள்

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி, 2021 தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இது நிறைவேற்றப்படாததால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், மீண்டும் வாக்குறுதியை மட்டுமே அளித்து 2026 தேர்தலில் வெல்லலாம் என நினைத்தால் ஏமாந்து போவார்கள் என அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.