News August 27, 2024
சென்னையிலிருந்து அரக்கோணத்திற்கு ரயில்கள் ரத்து

அரக்கோணம் யார்டில் 28 மற்றும் 29 தேதிகளில் மதியம் 2.40 முதல் மாலை 6:40 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.இதனால் சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.12.40,1.25,2.25, 3.50,4.45 நேரத்தில் இயக்கப்படும் ரயில்கள் திருவள்ளூர் வரை செல்லும். மறுமார்க்கத்தில் திருவள்ளூரில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
Similar News
News September 10, 2025
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை ரோந்து பணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (10.09.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் பற்றிய விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்குட்பட்ட காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இவர்களை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
ராணிப்பேட்டையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் ஆற்காடு நகராட்சியில் இந்திராணி ஜனகிராமன் திருமண மண்டபம், மேல்விஷாரம் நகராட்சியில் அண்ணாசாலை எச்.எம். ஆடிட்டோரியம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் குப்புசாமி திருமண மண்டபம், சோளிங்கர் வட்டாரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் திமிரி வட்டாரத்தில் கனியனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
News September 10, 2025
காவல் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 38 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஉறுதியளித்தார்.