News August 27, 2024
சென்னையில் பெண்களுக்கு காவல்துறை அறிவிப்பு

சென்னைக்கு பணி நிமித்தமாக பிற மாவட்டங்களில் இருந்து வந்துள்ள பெண்களுக்கு சென்னை காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான அடையாறு, தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகள் இயங்கி வருகிறது. இதில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற எண்ணிலும், http://tnwwhcl.in என்ற இணையதளத்திலும்விவரங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை விட்டுவிட்டு லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
சென்னை: போக்குவரத்து கழகத்தில் பயிற்சி வாய்ப்பு

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (MTC) 2025-2026 ஆம் ஆண்டிற்கான Apprentice பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2021-2025 ஆண்டுகளில், பொறியியல்,பட்டயப்படிப்பு முடித்த மாணவர்கள் இந்த <
News September 17, 2025
பெரியார் படத்திற்கு முதல்வர் மரியாதை

தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்.17) கொண்டாடப்படுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில், அவரது நினைவிடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தந்தை பெரியார் படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.