News August 27, 2024
விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு?

தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள், மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இச்சூழலில், விழுப்புரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், விக்கிரவாண்டியில் தாங்கள் தேர்வு செய்த இடம் நிச்சயமாக தேர்வாகவுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், மாநாட்டுக்கான விளம்பர போஸ்டர்கள், பேனர்களை அடித்து வைத்து கொண்டு தயார் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய் மாநாடு நடக்குமா? நடக்காதா?
Similar News
News March 3, 2026
திறனகம் சிறப்பு மாவட்ட திறன் மையங்கள் திறப்பு

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் தமிழ்நாடு திறன் மேம்பாடுக் கழகம் சார்பில் சென்னை பசுமை வழிச்சாலை முகாம் அலுவலகம் திறக்கப்பட்டது.இந்த அலுவலகத்தை குறிஞ்சி இல்லத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக திறனகம் சிறப்பு மாவட்ட திறன் மையங்கள் திறந்து வைத்ததை தொடர்ந்து, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனகம் மையத்தினை ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார்
News March 3, 2026
விழுப்புரம்: நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு<
News March 3, 2026
தன்னார்வலர்களுக்கு இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருது

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர்மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வனத்துறை சார்பில் மாவட்ட அளவில் இயற்கை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்களுக்கு இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (மார்ச்.03) வழங்கினார். உடன் மாவட்ட வன அலுவலர் பிரண்ஸ் குமார், உட்பட பலர் உள்ளனர்.


