News August 27, 2024

‘ZERO ACCIDENT DAY’ விழிப்புணர்வு வெற்றி

image

சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில், கடந்த 20 நாட்கள் (ஆக.5-25) ‘ZERO ACCIDENT DAY’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடத்தப்பட்டது. குறிப்பாக, 26ஆம் தேதி ஒருநாள் மட்டும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என போலீசார் கேட்டிருந்தனர். அதன்படி, நேற்று ஒரு நாள் சாலை விதிகளை மதித்து பொதுமக்கள் பயணித்தனர். இதனால், சென்னையில் நேற்று எந்தவொரு இடத்திலும் விபத்துக்கள் நடைபெறவில்லை.

Similar News

News September 17, 2025

சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு

image

சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை விட்டுவிட்டு லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 17, 2025

சென்னை: போக்குவரத்து கழகத்தில் பயிற்சி வாய்ப்பு

image

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (MTC) 2025-2026 ஆம் ஆண்டிற்கான Apprentice பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2021-2025 ஆண்டுகளில், பொறியியல்,பட்டயப்படிப்பு முடித்த மாணவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் வரும் அக்.18ம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும். இளைஞர்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், வேலை வாய்ப்பை பெறவும் இது நல்ல வாய்ப்பு ஷேர் பண்ணுங்க.

News September 17, 2025

பெரியார் படத்திற்கு முதல்வர் மரியாதை

image

தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்.17) கொண்டாடப்படுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில், அவரது நினைவிடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தந்தை பெரியார் படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!