News August 27, 2024

வந்தவாசி அருகே கண்பார்வையற்ற பெண் பாலியல் வன்கொடுமை

image

வந்தவாசி பகுதியைச் சேர்ந்தவர் குமார். கட்டிட தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த கண்பார்வையற்ற 23 வயது பெண்ணை நேற்று வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.அப்போது கூச்சம் போட்ட பெண்ணால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வந்தவாசி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வந்தவாசி போலீசார் குமாரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News August 24, 2025

ஆட்சி மொழி பயிலரங்கம் கருத்தரங்கம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற ஆகஸ்ட் 28, 29 தேதிகளில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. முதல் நாள் மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன் தலைமையிலும், இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையிலும் நடைபெற உள்ளது. தமிழ் வளர்ச்சி இயக்குனர் ஒளவை அருள் சிறப்புரை பேசுகிறார்.

News August 24, 2025

தி.மலை வருவாய்த்துறை சங்கங்களின் கோரிக்கை மாநாடு

image

திருவண்ணாமலையில் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை மாநாடு (ஆக. 23) நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊழியர்களுக்கு தனி பாதுகாப்புச் சட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், பணி பளுவை குறைத்தல், தனி ஊதியம் வழங்குதல், வெளிமுகமை, தொகுப்பூதிய நியமனத்தை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

News August 24, 2025

தி.மலை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

தி.மலை மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!