News August 27, 2024
இதெல்லாம் ஒரு கொடியா? விஜய்யை விமர்சித்த நாசர்

தவெக கொடியை அறிமுகம் செய்து அதிகாரப்பூர்வமாக அரசியல் களத்தில் குதித்துள்ளார் விஜய். இந்நிலையில், விஜய் அரசியலை மற்ற கட்சிகளை காட்டிலும் திமுக கடுமையாக விமர்சிக்கிறது. நிகழ்ச்சியொன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் நாசர், “ஏதோ கட்சிக் கொடியை அறிமுகப்படுத்துறாராம். குங்குமப் பொட்டு, சந்தனப் பொட்டு வெச்ச மாதிரி. நடுவுல தூங்கு மூஞ்சி பூ வேற. இதெல்லாம் ஒரு கொடியா?” எனக் கேள்வியெழுப்பினார்.
Similar News
News January 8, 2026
பணமில்லையா? மனமில்லையா? நயினார்

போராட்டத்தில் ஈடுபடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு <<18791380>>ஊதியம்<<>> வழங்கப்படாது என்ற அறிவிப்புக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசு வாக்குறுதியை வீசி எறிந்ததோடு, ஊதியத்தையும் வழங்காமல் ஆசிரியர்களின் வாழ்வை பறிப்பது அராஜகமானது என்று அவர் சாடியுள்ளார். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா நடத்தும் திமுக அரசுக்கு, சம ஊதியம் வழங்க பணமில்லையா (அ) மனமில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 8, 2026
வங்கி கணக்கில் பொங்கல் பரிசு ₹1,000.. புதிய அறிவிப்பு

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் விலையில்லா துணிக்கு பதிலாக ₹1,000 வழங்கப்படும் என புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இதன்படி, 1,45,930 ரேஷன் அட்டைதாரர்களுக்கு, அவர்களின் வங்கிக் கணக்கில் ₹1,000 வரவு வைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளது, பயனாளிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News January 8, 2026
MGR-க்கும் சென்சார் போர்டால் பிரச்னை: செல்லூர் ராஜூ

ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டால் எந்த நெருக்கடியும் இல்லை என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். எனினும் அன்றைய காங்., ஆட்சியில் MGR-ன் அன்பே வா படத்திற்கு சென்சார் பிரச்னை ஏற்பட்டதை நினைவு கூர்ந்தார். அப்படத்தில் ’உதய சூரியன் பார்வையிலே’ என்ற பாடல் வரும். அது சின்னத்தை குறிப்பதாக கூறி சென்சாரின் போது மாற்றச் சொன்னார்கள். பின்னர் U/A சான்றிதழ் பெற்று படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதாக கூறினார்.


