News August 27, 2024
வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும்

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 53ஆவது ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 6ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் அறிவித்தார். மேலும், விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை நாள் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் 31ஆம் தேதி விடுமுறை என்று நினைத்து விடவேண்டாம்.
Similar News
News August 21, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 21) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
News August 21, 2025
செங்கல்பட்டு: லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு..

செங்கல்பட்டு மக்களே லைசன்ஸ் அப்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தம் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே இந்த <
News August 21, 2025
தாம்பரம்-திருச்சி ரயில் சேவை நீட்டிப்பு

திருச்சி – தாம்பரம் – திருச்சி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06190/91), ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பகல் நேர ரயில், செவ்வாய், புதன், வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் தொடர்ந்து இயக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.