News August 27, 2024
தொடரும் அத்துமீறல்: தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த அவர்கள், தனுஷ்கோடி கடல் பகுதிக்கும், தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, மீனவர்கள் சென்ற விசைப் படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, விசாரணைக்காக அவர்களை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றுள்ளது.
Similar News
News January 24, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்வு!

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹2,800 உயர்ந்த நிலையில், இன்று(ஜன.24) மேலும் ₹560 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹14,620-க்கும், சவரன் ₹1,16,960-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது.
News January 24, 2026
திமுக கூட்டணியில் தேமுதிக? பிரேமலதா சஸ்பென்ஸ்

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என கூறிய பிரேமலதா, இதுவரை கூட்டணி பற்றி அறிவிக்கவில்லை. இந்நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது தொடர்பான கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத அவர், உரிய நேரத்தில் நல்ல முடிவெடுக்கப்படும் என்றார். மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு கால அவகாசம் உள்ளதாக குறிப்பிட்ட அவர், ஒரு அம்மாவாக தேமுதிகவிற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தனக்கு தெரியும் என்றும் பேசியுள்ளார்.
News January 24, 2026
தனிக்கட்சி தொடங்கி விஜய்யுடன் கூட்டணியா?

சமீபத்தில் வைத்திலிங்கம் தவெகவில் இணைந்து OPS-க்கு அதிர்ச்சி கொடுத்தார். அந்த வரிசையில் தற்போது OPS உடன் அரசியல் ஆலோசகராக இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன், ’MGR அதிமுக’ என புதிய கட்சியை தொடங்கி தவெகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கூட்டணி தொடர்பாக OPS எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதால் எரிச்சலடைந்த இவர் இம்முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


