News August 27, 2024
தமிழகத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

*தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க, CM ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா செல்கிறார்.
*திமுக MP தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில், எழும்பூர் கோர்ட்டில் இபிஎஸ் இன்று நேரில் ஆஜராகிறார்.
*ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் இன்று மாநிலம் முழுவதும் போராட்டம்.
*வங்கதேச கலவரத்தை கண்டித்து, இந்து மோர்ச்சா இன்று தமிழகம் முழுவதும் போராட்டம்.
Similar News
News July 6, 2025
தெய்வத்திருமகள் சியான் பொண்ணா இவுங்க…

இன்று வெளியான ‘துராந்தர்’ என்னும் பாலிவுட் படத்தில் டீசரில் இருப்பது யார் என தெரிகிறதா? ரன்வீர் சிங்குடன் டூயட் பாடிக்கொண்டிருக்கும் இந்த பெண் தான் ‘தெய்வத்திருமகள்’ படத்தில் சியான் விக்ரமின் மகளாக நடித்தவர். அன்று சுட்டிக் குழந்தையாக ரசிகர்களை ஈர்த்த சாரா அர்ஜூன், தற்போது 20 வயதில் சாரா பாலிவுட்டில் ஹீரோயினாக கலக்க இருக்கிறார். தமிழிலும் ஹீரோயினாக யாராவது புக் பண்ணுவாங்களா?
News July 6, 2025
ICUவில் அஜித் குமார் தம்பி… அடுத்தடுத்து திருப்பம்

போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட அஜித் குமாரின் தம்பி நவீன் மதுரை ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போலீஸ் தாக்கியதில் தனது கால் பாதங்களில் வலி ஏற்பட்டிருப்பதாக நவீன் கூறியதால் சிகிச்சைக்காக அட்மிட் செய்திருப்பதாக அவரது தாய் மாமா விளக்கம் அளித்துள்ளார். அண்ணனை போலீஸ் விசாரிக்கும்போது தன்னையும் தாக்கியதாக நவீன் ஏற்கனவே கூறி இருந்தார்.
News July 6, 2025
ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என்பதை அறிய…

ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என்பதை அறிய ●அறையிலுள்ள விளக்குகளை அணைத்து, சின்னதாக LED லைட்டின் வெளிச்சம் எங்காவது தெரிகிறதா என கவனியுங்க ●உங்கள் விரலுக்கும் கண்ணாடியில் தெரியும் விரலின் பிரதிபலிப்புக்கும் இடையில் எந்த இடைவெளியும் இல்லை என்றால், அந்த கண்ணாடியை நன்றாக செக் பண்ணுங்க ●கேமரா கண்டுபிடிப்பு செயலிகளைப் பயன்படுத்தி, போனின் கேமரா & சென்சார் மூலம் கண்டுபிடிக்கலாம். SHARE IT.