News August 27, 2024
காரைக்காலில் அதிவேக வாகனங்கள் மீது அபராதம்

காரைக்கால் மாவட்டத்தில் வாகன விபத்தை தடுக்க வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதை விட அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்தும் வகையில் Speed Rador Gun கருவி மூலம் காரைக்கால் அடுத்த அம்மாள்சத்திரம் பகுதியில் காரைக்கால் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்று போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து அதிவேகமாக செல்லும் வாகனங்களை இந்த கருவி மூலம் கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர்.
Similar News
News March 7, 2026
புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் புதுச்சேரி தட்டாஞ்சாவடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
News March 7, 2026
முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியில், முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ச. கார்த்திக் குமாரி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அழகு கலை வல்லுநரான அவர், நாம் தமிழர் கட்சி சார்பில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் அந்த தொகுதியில் தேர்தல் போட்டி மேலும் கவனம் ஈர்த்துள்ளது.
News March 7, 2026
திமுகவுக்கு இடமில்லை: கிரிஷ் சோடங்கர் அதிரடி

புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி ஆட்சியில் திமுகவுக்கு பங்கு இல்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். தங்களது தலைமையிலேயே கூட்டணி ஆட்சி அமையும் என்று திமுக தொடர்ந்து கூறி வரும் நிலையில், காங்கிரஸின் இந்த அறிவிப்பு இரு கட்சிகளிடையே அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


