News August 27, 2024
கனரக வாகனங்களில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை

நெல்லை மாவட்டத்தில் 10 சக்கரங்களுக்கு மேலுள்ள கனரக வாகனங்களில் கனிமங்கள் ஏற்றிச் செல்ல தடை விதித்து ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் விதிகளை மீறிய 100 க்கும் மேற்பட்ட லாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று குவாரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விதிமீறல் குறித்து பொதுமக்கள் 94981 01765 எண்களில் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 21, 2025
அஞ்சல் அயல் முகவர் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

நெல்லை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுசிலா தெரிவித்ததாவது: அஞ்சல் சேவைகளை விரிவுபடுத்த அஞ்சல் அயல் முகவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தகுதியான தனிநபர், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். அஞ்சலகங்கள் இல்லாத இடங்களில் சேவைகளை மேம்படுத்த இத்திட்டம் உதவும். விண்ணப்பங்களை 27ம் தேதிக்குள் பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் சமர்ப்பிக்கலாம். விவரங்களை அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் பெறலாம்.
News August 21, 2025
நெல்லையில் இன்று முதல் ஆர்ப்பாட்டத்திற்கு தடை

நெல்லை தச்சநல்லூரில் நாளை (வெள்ளிக்கிழமை) பா.ஜனதா பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் நெல்லை மாநகரில் போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 4-ந்தேதி வரை நெல்லையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங் கள் நடத்த அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார் .
News August 21, 2025
நெல்லை: ரூ.96,000 சம்பளத்தில் கூட்டுறவு வங்கியில் பணி

நெல்லை மக்களே; தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்கள் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2513 (உதவியாளர் / மேற்பார்வையாளர் / எழுத்தர் / இளநிலை உதவியாளர்) பதவிகளை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.29ம் தேதி மாலை 05.45 மணி வரை. விருப்பமுள்ளவர்கள் <