News August 26, 2024
51 அடி உயரத்தில் தவெக கொடியை பறக்கவிட்ட பொதுச்செயலாளர்

தமிழக வெற்றி கழகத்தின் கொடி கடந்த சில நாட்களுக்கு முன்பாக கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்தார். இதையடுத்து கட்சி நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளில் கொடியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை பெருங்குடி பகுதியில் இன்று 51 அடி உயரமுள்ள கம்பத்தில் கழக கொடியினை ஏற்றி வைத்தார் கட்சியின் பொதுச் செயலாளர் புஷ்பி ஆனந்த். அதனை தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Similar News
News September 17, 2025
திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்: போக்குவரத்து மாற்றம்

சென்னையில் நாளை திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற உள்ளதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 8மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் ஈவேரா சாலை,ராஜாஜி சாலை, உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் உள்ள மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
News September 16, 2025
20 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்

நெல்லை-சென்னை இடையே 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் 20 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் வருகை அதிகரிப்பால் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் பயணிகளின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
News September 16, 2025
பிரான்ஸ் மாகாணத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பிரான்ஸ் நாட்டின் வால் டி லாயர் மாகாணத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கலாச்சார பரிமாற்றம் மற்றும் சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று
கையெழுத்திடப்பட்டது. சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.