News August 26, 2024
காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றவருக்கு ₹1000 அபராதம்

உத்தரபிரதேசத்தில் காரில் சென்ற நபர் ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி போலீசார் ₹1,000 அபராதம் விதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துஷார் சக்சேனா என்ற நபர் கடந்த மார்ச் மாதம் காரில் சென்ற நிலையில், ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி காவல் துறையிடமிருந்து மெசேஜ் வந்துள்ளது. தவறுதலாக வந்திருக்கலாம் என அவர் நினைத்த நிலையில், அபராதத்தை கட்டவில்லை என்றால் சட்ட நடவடிக்கை பாயும் என மீண்டும் மெசேஜ் வந்துள்ளது.
Similar News
News March 9, 2026
இன்ஸ்டாவில் தோனி – கம்பீரின் FUN CHAT!

T20I WC வெற்றியைத் தொடர்ந்து Ex கேப்டன் தோனிக்கும், கோச் கம்பீருக்கும் இடையே நடைபெற்ற இன்ஸ்டா உரையாடல் வைரலாகி வருகிறது. டீமை பாராட்டிய தோனி, ‘கோச் சாப்… உங்க முகத்தில் இருக்கும் புன்னகை அழகாக உள்ளது. சீரியஸ்னஸ் உடன் சிரிப்பு சேர்ந்தால் அது ‘கில்லர் காம்போ’ என பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள கம்பீர், உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.
News March 9, 2026
₹30 லட்சம் கோடி காலி.. கலங்கும் முதலீட்டாளர்கள்!

வாரத்தின் முதலில் நாளிலேயே பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,271 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. இதனால் இன்றைய வர்த்தகத்தின் முடிவில், சுமார் ₹30 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டது. போர் பதற்றம், சர்வதேச சந்தைகளின் சரிவு உள்ளிட்டவை சரிவுக்கு காரணங்களாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக IndiGo பங்குகள் 8% அளவுக்கு சரிவை சந்தித்தது.
News March 9, 2026
ராஜ்யசபாவுக்கு 6 பேரும் போட்டியின்றி தேர்வு

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி அறிவித்துள்ளார். திமுகவில் இருந்து திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸில் கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிகவின் சுதீஷ் ஆகியோர் ராஜ்யசபா MP-க்களாக தேர்வாகியுள்ளனர். அதேபோல் அதிமுகவின் தம்பிதுரை, பாமகவின் அன்புமணி ஆகியோரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.


