News August 26, 2024
சுங்கக்கட்டணம் உயர்வுக்கு திருமாவளவன் கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததற்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கட்டண உயர்வு சரக்கு கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும், இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் என்றும் கூறியுள்ளார். எளிய மக்களை கசக்கி பிழியும் இந்த கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News August 24, 2025
வரலாறு காணாத வசூல் செய்த மஹா அவதார் நரசிம்மா

மஹா அவதார் நரசிம்மா திரைப்படத்தின் வசூல் குறித்து hombale films அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 5வது வாரத்திற்குள் நுழையும் மஹா அவதார் நரசிம்மா திரைப்படம் இதுவரை உலகளவில் ₹278 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவில் வெளிவந்த ஒரு அனிமேஷன் திரைப்படத்தின் வரலாறு காணாத வசூல் சாதனை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 24, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 24, 2025
காதலை பற்றி நடிகை மிருணாள் சொல்வது இதுதான்..!

உண்மையான காதல்தான் தனக்கு முக்கியம் என நடிகை மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார். காதலில் துரோகம் செய்யப்படுமோ என்ற பயம் இருப்பதாகவும், அதேநேரத்தில் காதல் தோல்வியை சந்தித்தாலும் அதனை வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் தனுஷும் மிருணாள் தாக்கூரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. தனுஷ் தனக்கு நல்ல நண்பர் என அவர் விளக்கம் கொடுத்திருந்தார்.