News August 26, 2024

கிருஷ்ணகிரி விவகாரத்தில் 2 பேர் கைது

image

தமிழகத்தை உலுக்கிய கிருஷ்ணகிரி விவகாரத்தில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பர்கூரில் தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த சுதாகர், கமல் ஆகியோரை தனிப்படை போலீசார் விரட்டிச் சென்று கைது செய்துள்ளனர். முன்னதாக முக்கிய குற்றவாளியான சிவராமன், எலி மருந்து சாப்பிட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 4, 2026

மேலும் ரூ.1,000 அறிவித்தார் ஸ்டாலின்.. இன்ப அதிர்ச்சி

image

டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தை ₹1,000 உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் 24,033 டாஸ்மாக் ஊழியர்கள் பயன் பெறுவர் என்றும், அவர்களுக்கு ESI மருத்துவ, சமூக பாதுகாப்பு திட்டத்தில் மருத்துவக் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2026

பட்டாசை வெடிக்கும் நியூசிலாந்து

image

T20 WC அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து அபாரமாக விளையாடி வருகிறது. 170 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் நியூசிலாந்து அணி, 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. டிம் சீஃபர்ட் அரைசதம் விளாசி ரபாடா பந்தில் கிளின் போல்ட் ஆனார். ஆலன் அரைசதத்தை கடந்து களத்தில் உள்ளார். இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப்பில் சிக்ஸரும், பவுண்டரிகளும் பறந்தன.

News March 4, 2026

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் அறிவிப்பு.. பாமகவுக்கு 1 சீட்

image

ராஜ்யசபா அதிமுக வேட்பாளராக தம்பிதுரை போட்டியிடுவார் என EPS அறிவித்துள்ளார். அதேபோல், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். நாளையுடன் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடையவுள்ள நிலையில், <<19299051>>திமுக<<>>, அதிமுக அடுத்தடுத்து வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

error: Content is protected !!