News August 26, 2024
விஜய்யை கிண்டலடித்த ஆர்.எஸ்.பாரதி

யார் கட்சி ஆரம்பித்தாலும் இரு அமாவாசைகளுக்கு மட்டுமே தாங்கும் என்று திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கிண்டலடித்துள்ளார். கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அவர், மீனவர்களும், மாணவர்களும் திமுக மீது நம்பிக்கை வைத்துள்ளனர் எனக் கூறினார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Similar News
News March 13, 2026
கமேனியின் மனைவியும் கொல்லப்பட்டாரா?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து புதிய உயர் தலைவராக மொஜ்தபா கமேனி பொறுப்பெற்ற நிலையில் அயதுல்லா அலி கமேனியின் மனைவி மன்சௌரே கோஜஸ்தே பாகர்சாதே கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து திட்டவட்டமாக மறுத்துள்ள ஈரானின் ‘ஃபார்ஸ்’ ஊடகம், அவருடன் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.
News March 13, 2026
பாகிஸ்தான் வீரரால் SRH அணிக்கு குவியும் எதிர்ப்பு!

தி ஹண்ட்ரட் தொடருக்கான ஏலத்தில் <<19367924>>பாக்., வீரர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியது<<>> அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது. SRL அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறனுக்கு சொந்தமானது. அப்ராரின் ஏலத்தை ஒருபக்கம் சிலர் பாராட்டினாலும், தேசிய உணர்வை அவமதித்ததாக கூறி #ShameOnSRH, #BoycottSunrisers போன்ற ஹேஷ்டேக்குகள் SRH-க்கு எதிராக SM-ல் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News March 13, 2026
இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி!

ஹார்முஸ் நீரிணையில் நிலவும் ஈரானின் தாக்குதலால், பல எண்ணெய் கப்பல்கள் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை எடுத்துக்கூறி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் <<19367934>>PM மோடி ஈரான் அரசுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை<<>> நடத்தினர். அதன் பலனாக இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல ஈரான் அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது.


