News August 26, 2024
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டக புத்தகம்

நெல்லை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் மெல்ல கற்கும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி கட்டகம் என்ற புத்தகம் தயாரிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. அனுபவம் மிக்க ஆசிரியர்கள் இந்த பயிற்சி கட்டக புத்தகங்களை தயாரித்துள்ளனர். இவை விரைவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி கூடுதல் மதிப்பெண் எடுப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கல்வி துறையினர் தெரிவித்தனர்.
Similar News
News November 3, 2025
நெல்லை: பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு

நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் அடுத்த 2026 – 27ம் கல்வி ஆண்டில் ஐஐடி என்ஐடி உள்ளிட்ட உயர்த்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பிஇ, பி டெக் சேர்க்கைக்கு ஜே இ இ மெயின் தேர்வுக்கு நவம்பர் 27ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.nta.ac.in இன்று இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு மைய விவரம் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
News November 3, 2025
நெல்லை: TNHB -ன் அடுக்குமாடி சொந்த வீடு APPLY!

நெல்லை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்<
News November 3, 2025
நெல்லை: முன்னாள் எஸ்.ஐ மகனுக்கு கொலை மிரட்டல்!

நெல்லை டவுனை சேர்ந்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி, வக்பு நிலப்பிரச்சினையில் கடந்த மார்ச் மாதம் கொலை செய்யபட்டார். பிஜிலியின் மகன் இஜூர் ரகுமான் பிஜிலிக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக அவரது மனைவி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது மகனுக்கு ஆபத்து இருப்பதாகவும், நிலம் குறித்து முறையான விசாரணை நடத்தி, முதல்வர் நியாயம் வழங்க கோரியுள்ளார். இதுக்குறித்து டவுன் போலீசார் விசாரணை.


