News August 26, 2024
வங்கி வேலை: விண்ணப்பிக்க 2 நாள்களே அவகாசம்

வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாளே அவகாசம் உள்ளன. பல்வேறு வங்கிகளில் PROBATIONARY OFFICERS, MANAGEMENT TRAINEES, SPECIALIST OFFICERS பதவிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் அறிவிப்பு கடந்த 1ஆம் தேதி வெளியானது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் முடிய 2 நாள்களே உள்ளதால், https://www.ibps.in/ இணையதளத்தில் உடனே விண்ணப்பிக்கவும். SHARE IT
Similar News
News July 6, 2025
சிக்கன் விலை உயர்வு

வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி கிலோ (உயிருடன்) ₹2 உயர்ந்து ₹105-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், முட்டைக் கோழி கிலோ ₹97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலை உயர்ந்ததால் தமிழ்நாடு முழுவதும் சிக்கன் விலை இன்று ₹5 முதல் ₹10 வரை அதிகரித்துள்ளது.
News July 6, 2025
தமிழ்நாடு சுற்றுப் பயணத்தை ரத்து செய்த அமித்ஷா!

அமித்ஷா நாளை(ஜூலை 7) சென்னை வரவிருந்த நிலையில், தனது பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். 8-ம் தேதி தமிழக BJP மூத்தத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம், தொகுதிவாரியாக ஆய்வுப் பணிகள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவிருந்தார். மேலும், பாமக, தேமுதிக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அமித்ஷாவின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
News July 6, 2025
மணம் வீசும்.. மசாலா வாசம்! உலக பிரியாணி தினம் இன்று!

ஆண்டுதோறும் ஜூலையின் முதல் வார ஞாயிற்றுக்கிழமை சர்வதேச பிரியாணி தினமாக கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய, கலாச்சார உணவாக உருவெடுத்து இருக்கும் பிரியாணி மெனுவில் இல்லையென்றால், அந்த ஹோட்டலுக்கு நம்மில் பலரும் போகவே மாட்டார்கள். சிக்கன், மட்டனில் தொடங்கி மண்பானை, மீன் பிரியாணி என பல வகைகளும், ஹைதரபாதி, சிந்தி பிரியாணி என பிராந்தியங்களுக்கு ஏற்பவும் பல வெரைட்டிகள் உள்ளன. உங்களுக்கு பிடிச்ச பிரியாணி எது?