News August 26, 2024

சித்தா, ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் சேர…..

image

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஆக.27) கடைசி நாளாகும். நீட் அடிப்படையில்தான் இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விண்ணப்பப்பதிவு மற்றும் தகவல் தொகுப்பேட்டினை <>https://tnhealth.tn.gov.in/<<>> என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து நாளை மாலை 5:30 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 6, 2025

கர்ப்பிணிகள் மீன் சாப்பிடலாமா?

image

கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடுவது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது. தாய்க்கும் மீன்கள் நல்ல ஊட்டச் சத்துகளை வழங்கும். அதே நேரம் பாதரச அளவுகள் குறைவாக உள்ள மீன்களையே தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நெத்திலி, சால்மன், மத்தி, லைட் சூரை, வெங்கணா போன்ற மீன்கள் தாய்க்கும் சேய்க்கும் சிறந்ததாக இருக்கும் என்கிறார்கள். எனவே டாக்டரிடம் ஆலோசனை பெற்ற பின் சாப்பிடவும்.

News July 6, 2025

அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கமா?

image

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததை கடுமையாக விமர்சித்ததால் அதிமுகவிலிருந்து <<16962233>>அன்வர் ராஜா<<>>வை இபிஎஸ் நீக்கினார். அதன்பின் இபிஎஸ்ஸிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து அண்மையில் அதிமுகவில் இணைந்தார். தற்போது மீண்டும் பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்ததை கடுமையாக சாடியிருக்கிறார். இதனால், அவர் மீது இபிஎஸ் நடவடிக்கை ( கட்சியில் இருந்து நீக்கம்) எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 6, 2025

பாஜகவின் திட்டம் பலிக்காது: அன்வர் ராஜா பாய்ச்சல்

image

தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் பாஜகவின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா கூறியுள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள அவர், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் சிறுபான்மையினரின் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவுக்கு கிடைக்காது எனவும் சர்ச்சையான கருத்தைக் கூறியுள்ளார். இது, கூட்டணியிலிருந்து பாஜகவை கைகழுவும் முடிவோ? என பலரும் கருத்து கூறுகின்றனர்.

error: Content is protected !!