News August 26, 2024
காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!

கடந்த 50 ஆண்டுகளில் இந்தியர்களின் வாழ்வில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முந்தைய தலைமுறை லெட்டருக்கும், மணி ஆர்டருக்கும் காத்திருந்தார்கள். இன்றோ நொடியில் தகவல்களையும், பணத்தையும் பகிர்கிறோம். நேற்றைய நிகழ்வு இன்றைய செய்தி என்ற காலம் மாறி, Liveஇல் செய்திகளை அறிகிறோம். இப்படி எத்தனையோ மாற்றங்களை சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் நினைத்து பிரம்மிக்கும் மாற்றம் என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News July 6, 2025
சிக்கன் விலை உயர்வு

வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி கிலோ (உயிருடன்) ₹2 உயர்ந்து ₹105-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், முட்டைக் கோழி கிலோ ₹97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலை உயர்ந்ததால் தமிழ்நாடு முழுவதும் சிக்கன் விலை இன்று ₹5 முதல் ₹10 வரை அதிகரித்துள்ளது.
News July 6, 2025
தமிழ்நாடு சுற்றுப் பயணத்தை ரத்து செய்த அமித்ஷா!

அமித்ஷா நாளை(ஜூலை 7) சென்னை வரவிருந்த நிலையில், தனது பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். 8-ம் தேதி தமிழக BJP மூத்தத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம், தொகுதிவாரியாக ஆய்வுப் பணிகள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவிருந்தார். மேலும், பாமக, தேமுதிக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அமித்ஷாவின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
News July 6, 2025
மணம் வீசும்.. மசாலா வாசம்! உலக பிரியாணி தினம் இன்று!

ஆண்டுதோறும் ஜூலையின் முதல் வார ஞாயிற்றுக்கிழமை சர்வதேச பிரியாணி தினமாக கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய, கலாச்சார உணவாக உருவெடுத்து இருக்கும் பிரியாணி மெனுவில் இல்லையென்றால், அந்த ஹோட்டலுக்கு நம்மில் பலரும் போகவே மாட்டார்கள். சிக்கன், மட்டனில் தொடங்கி மண்பானை, மீன் பிரியாணி என பல வகைகளும், ஹைதரபாதி, சிந்தி பிரியாணி என பிராந்தியங்களுக்கு ஏற்பவும் பல வெரைட்டிகள் உள்ளன. உங்களுக்கு பிடிச்ச பிரியாணி எது?