News August 26, 2024
ஆத்தூர் சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

சேலம், ஆத்தூரில் உள்ள ஆத்தூர் கிளைச் சிறையில் மளிகைப் பொருட்களை வெளியில் விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் ஆத்தூர் மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் ஜெயந்தியை சஸ்பெண்ட் செய்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் நேற்று உத்தரவிட்டுள்ளார். சிறை கண்காணிப்பாளர் ஜெயந்தியை சஸ்பெண்ட் செய்த சம்பவம் காவல்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 10, 2026
சேலம்: மாதம்தோறும் ரூ.4,000 நிதியுதவி வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!
News March 10, 2026
சேலம்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News March 10, 2026
சேலத்தில் அரங்கேறிய கத்தி குத்து சம்பவம்!

சேலம் மன்னார்பாளையத்தில் தங்கி வேலை செய்த திருச்சியைச் சேர்ந்த தமிழரசன், பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; இது குறித்து வீராணம் போலீசார் நடத்திய விசாரணையில், அவருக்கும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் ஜெகதீசனுக்கும் இடையே இருந்த முன்விரோதத்தால் இச்சம்பவம் நடந்தது தெரிந்தது; தமிழரசனை கத்தியால் குத்திய ஜெகதீசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


