News August 26, 2024
ஈரோடு: டிரைவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு: பர்கூர் தாழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் லாரி டிரைவரான மாதேவன். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு லாரி வாங்கி ஓட்டி வந்ததாகவும், அதில் கடன் ஏற்பட்டு லாரியை விற்ற நிலையில், கடன் தொந்தரவு தாங்க முடியாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கட்டி சமுத்திரம் ஏரி பகுதியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 28, 2025
ஈரோடு: முற்றிலும் நிறுத்தம்!

பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஜூலை மாதம் கீழ் பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் திறப்பு காலம் முடிவடைந்ததால் அணையில் இருந்து கீழ் பவானி பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டு வந்த தண்ணீர் இன்று முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதே சமயம் அரக்கன் கோட்டை தட பள்ளி பாசனத்திற்கு 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 97.77 அடியாக உள்ளது.
News December 28, 2025
ஈரோடு: பதிவு செய்தால் ரூ.5 லட்சம் கிடைக்கும்!

CMன் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். இதை SHARE பண்ணுங்க!
News December 28, 2025
பவானிசாகரில் கடைகளுக்கு சீல்!

பவானிசாகர் அருகே உள்ள முடுக்கன் துறை பட்ரமங்கலம் பகுதிகளில் செயல்படும் 3 மளிகை கடைகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ராஜேந்திரன் ரமேஷ் குமார் நந்தகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் மூன்று மளிகை கடைகளுக்கு இன்று சீல் வைத்தனர்.


