News August 26, 2024

ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் கோகுலாஷ்டமி

image

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (ஆக.26) கோகுலாஷ்டமியை முன்னிட்டு பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவியங்களால் ஸ்ரீ நவநீதகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நவநீதகிருஷ்ணன் சுவாமியை வழிபட்டு மகிழ்ந்தனர்.

Similar News

News December 4, 2025

காரியாபட்டி அருகே நாகாத்தம்மன் கோயில் திருவிழா

image

காரியாபட்டி அருகே கணக்கநேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நாகாத்தம்மன் புத்துக்கோயில் 7-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மேலும் விழாவில் பக்தர்கள் அழகு குத்தி, காவடி எடுத்து, முளைப்பாரி வளர்த்து தன்னுடைய நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News December 4, 2025

விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

விருதுநகர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04562 -252723 அணுகலாம். SHARE பண்ணுங்க.

News December 4, 2025

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

ஸ்ரீவில்லிபுத்தூர் மாதாங்கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இவர் தங்கை முறை உள்ள பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் அம்மாவுக்கும், மணிகண்டனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!