News August 26, 2024
துரைமுருகனை இடைக்கால CM ஆக்குங்க.. சீமான் அட்வைஸ்

துரைமுருகனை இடைக்கால முதல்வராக்க வேண்டுமென <<13944069>>சீமான் <<>>வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் பேசிய அவரிடம், CM ஸ்டாலின் நாளை வெளிநாடு செல்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சீமான், ஸ்டாலின் வெளிநாடு சென்று திரும்பும்வரை துரைமுருகனை இடைக்கால CM ஆக்க வேண்டுமென்றார். இபிஎஸ் புத்திசாலியான அரசியல்வாதி, அவரை தற்குறி என அண்ணாமலை விமர்சித்திருக்ககூடாது என்றார்.
Similar News
News March 5, 2026
கார்களின் விலை சரசரவென குறைந்தது

கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? மார்ச் மாத சிறப்பு சலுகைகள் தொடங்கி உள்ளன. ஹோண்டா தனது கார்களுக்கு அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹57,000 முதல் அதிகபட்சமாக ₹1.97 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப் பக்கம் ஸ்வைப் செய்து தெரிந்து கொள்ளுங்கள். SHARE IT.
News March 5, 2026
OPS மீதான 4 வழக்குகள் ரத்தானது!

OPS-க்கு எதிரான நான்கு வழக்குகளை சென்னை HC ரத்து செய்துள்ளது. கடந்த மக்களவை உள்ளிட்ட தேர்தல்களில் தேர்தல் விதிமுறையை மீறியதாக OPS மீது பரமக்குடி, திருவாடானை, திருப்புல்லாணி, கீழக்கரை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வழக்கில் போதுமான ஆதாரங்களை போலீசார் சமர்ப்பிக்காததை அடுத்து OPS-க்கு எதிரான 4 வழக்குகளையும் ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News March 5, 2026
எல்லா புகழும் விஜயகாந்துக்கே: பிரேமலதா

ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக சார்பில் சுதீஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, நீண்ட நாள் கனவு நிறைவேறும்போது ஏற்படும் மகிழ்ச்சி தற்போது கிடைத்துள்ளது. எல்லா புகழும் விஜயகாந்துக்குதான் என உருக்கமாக கூறினார். அத்துடன் விஜயகாந்த் தான் தெய்வமாக இருந்து தங்களை வழிநடத்தி வருகிறார் என்றும், தேமுதிகவின் ஒவ்வொரு வெற்றியும் அவருக்கு தான் சேரும் எனவும் தெரிவித்தார்.


