News August 26, 2024

மாஞ்சோலை குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி

image

அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை பகுதியில் தற்போது தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலையில்லாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால் வனவிலங்குகள் தேயிலை தோட்டத்திற்குள் சர்வசாதாரணமாக உலா வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி ஒன்று அப் பகுதியில் உலா வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Similar News

News August 24, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆக.23) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News August 24, 2025

நெல்லைக்கு விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மைசூரு – நெல்லை இடையே ஆக.26, 27 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மைசூரில் இருந்து ஆக.26 இரவு 8:15 மணிக்குப் புறப்படும் ரயில், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக ஆக. 27 காலை 10:50 மணிக்கு நெல்லையை சென்றடையும். மறுமார்க்கத்தில், நெல்லையில் இருந்து ஆக.27 பிற்பகல் 3:40 மணிக்குப் புறப்படும் ரயில், ஆக. 28 காலை 5:50 மணிக்கு மைசூரை சென்றடையும். *ஷேர்

News August 23, 2025

நெல்லை: டிகிரி போதும்! ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

நெல்லை மக்களே; வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) தமிழகத்தில் 894 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு 20 – 28 வயதிற்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணபிக்க இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவர்களுக்கு Rs.24,050 – 64,480 வரை சம்பளம் வழங்கப்படும்; விண்ணப்பிக்க கடைசி நாள் 28.08.25. *ஷேர் செய்தால் பிறருக்கும் உதவும்.

error: Content is protected !!