News August 26, 2024
காவலர் வேலைவாய்ப்பு.. நாளை முதல் விண்ணப்பப் பதிவு

NIA உள்ளிட்ட அமைப்புகளில் காலியாக உள்ள காவலர் வேலைகளுக்கு ஆட்தேர்வு தொடர்பான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நாளை வெளியிடவுள்ளது. ssc.gov.in. என்ற இணையதளத்தில் நாளை அறிவிப்பு வெளியானதும் NIA, CAPFs, SSF மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் காவலர் வேலைக்கு உடனடியாக விண்ணப்பப் பதிவு தொடங்கும். விருப்பமுள்ளோர் அந்த தளத்தில் அக்டோபர் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News January 3, 2026
FLASH: வெனிசுலா அதிபர் சிறை பிடிப்பு

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் சிறை பிடித்து நாடு கடத்திவிட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அரசியல் சாசனம் மற்றும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு, <<18750130>>வெனிசுலா மீது தாக்குதல்<<>> நடத்தப்பட்டதாகவும், சில மணி நேரங்களிலேயே மதுரோ சிறைபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வெனிசுலா தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
News January 3, 2026
இந்த காய் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!

காய்கறிகள் சாப்பிடுவதால் உங்கள் உயிரே போகலாம் என சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம், முட்டைகோஸ், கத்திரிக்காய், காலிஃபிளவர், கீரை போன்ற காய்கறிகளில் இருக்கும் நாடபுழுக்கள் தற்போது அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனை சரியாக கழுவாமல் சாப்பிட்டால், புழுக்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து, மூளைக்கு சென்றடையும். பிறகு, வலிப்பு, தலைவலியில் தொடங்கி உயிரையே பறிக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.
News January 3, 2026
அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் அளித்த பொங்கல் பரிசு

அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (TAPS) குறித்து CM ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு உண்மையாக இருக்கும் என மீண்டும் ஒருமுறை செய்து காட்டியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசாக <<18749969>>TAPS<<>> அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


