News August 26, 2024
கரூரில் நாளை இப்பகுதியில் மின்தடை

கரூரில் நாளை(27.8.24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், அய்யர்மலை, பஞ்சப்பட்டி, மாயனூர், தோகைமலை, நச்சலூர், வல்லம், பாலவிடுதி, சிந்தாமணிப்பட்டி, கொசூர், பணிக்கம்பட்டி, வெள்ளியனை ஆகிய துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின்நிலையங்கள் கீழ் உள்ள பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின்விநியோகம் இருக்காது.
Similar News
News December 28, 2025
கரூர் மாவட்டத்தில் 6 பேர் கைது!

கரூர், தென்னிலை, வெள்ளியணை, வாங்கல், வெங்கமேடு ஆகிய காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற முத்துசாமி (41), ஆறுமுகம் (56), ராஜா (37), சண்முகம் (60), சேகர் (53), ஆசைதங்காள் (63) ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 150 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
News December 28, 2025
கரூர்: பெண் பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY…!

கரூர் மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/-மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க <
News December 28, 2025
கரூருக்கு பெருமை சேர்த்த வீராங்கனை!

51 வது ஜூனியர் பெண்கள் கபடி போட்டியில் தமிழக அணியில் விளையாடுவதற்காக கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாணவி ஷா.மதினா பேகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 6வது முறையாக தமிழக அணிக்காக விளையாட உள்ளார். இவருக்கு கல்லூரி முதல்வர் நடேசன் மற்றும் செயலாளர் கண்ணன் ஆகியோரும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறை சார்ந்த நிர்வாகிகளும் பாராட்டுக்கள் தெரிவித்திருக்கின்றனர்.


