News August 26, 2024
ALERT: இடி, மின்னலுடன் மழை கொட்டும்

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. அதேநேரம், மாநிலத்தில் எங்கும் கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.
Similar News
News March 16, 2026
வங்கி கணக்கில் ₹12,000.. தமிழக அரசு கொடுத்த GOOD NEWS

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான திறன் படிப்புதவித் திட்ட தேர்வு(NMMS) ஜன.10 -ல் நடைபெற்றது. இதில், தேர்வானவர்களின் பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் Other Examination பகுதியில் சென்று பட்டியலை காணலாம். தேர்வாகியுள்ள மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹12,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு *₹48,000 உதவித்தொகை வழங்கப்படும்.
News March 16, 2026
உலக சாம்பியன்களை பாராட்டிய CM ஸ்டாலின்

T20I WC-ஐ தொடர்ந்து 2-வது முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி & வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். அவர்கள் இருவரையும் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து CM ஸ்டாலின் பாராட்டியுள்ளார். அப்போது T20I அணியின் ஜெர்சி & தொப்பியை CM-க்கு இருவரும் பரிசளித்தனர். இந்த சந்திப்பின் போது, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியும் உடனிருந்தார்.
News March 16, 2026
கஞ்சா விற்பனையால் பாலியல் தாக்குதல்: அண்ணாமலை

திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில், TN முழுவதும் கஞ்சா புழக்கம் பெருகியுள்ளதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் சேலம் கோரிமேட்டில் 66 வயது மூதாட்டியை, கஞ்சா போதையில் 2 பேர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும் சம்பவத்தை அதிர்ச்சியுடன் சுட்டிக்காட்டியுள்ளார். கஞ்சா விற்பனையில் பெரும்பாலும் திமுகவினரே ஈடுபடும் நிலையில் உடனடியாக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் கோரியுள்ளார்.


