News August 26, 2024
திருச்சியில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார். இதற்காக அந்தந்த பேருந்து நிலையங்களில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 25, 2025
பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)
News April 25, 2025
திருச்சி விழுப்புரம் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில்

விழுப்புரம் – ராமேஸ்வரம் அதிவிரைவு சிறப்பு ரயில் திருச்சி வழியாக இயக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் வரும் மே.2ஆம் தேதி முதல் ஜூன்.30 வரை திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. இன்று (ஏப்.25) முதல் இதற்கான முன்பதிவு தொடங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 25, 2025
திருச்சி: டிகிரி முடித்தவர்க்ளுக்கு வேலை?

தமிழ்நாட்டில் உள்ள 1,299 காலி எஸ்.ஐ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுத படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3 க்குள் https://www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க