News August 26, 2024
விஸ்வரூபம் எடுக்கும் சுங்கச்சாவடி பிரச்னை

தமிழகத்தில் உள்ள 28 NHAI சுங்கச்சாவடிகளில் (7% வரை) கட்டணம் உயர்வு செப்.1ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக சுங்கச்சாவடி பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 67 சுங்கச்சாவடிகளில், நகராட்சி & மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வானகரம், பரனூர் உள்ளிட்ட 32 காலாவதியாகியுள்ளன. இங்கே விதிப்படி கட்டணமே வசூலிக்கப்படக் கூடாது. இருப்பினும், வசூலிக்கப்படுவதே இதற்கு காரணமாகும்.
Similar News
News March 5, 2026
திருப்பதி வைகுண்ட தரிசன டிக்கெட்.. Whatsapp-ல் பெறலாம்!

திருப்பதி கோயில் தரிசன டோக்கனை WhatsApp மூலம் ஈசியாக பெறலாம் தெரியுமா? Whatsapp-ல் ஆந்திர அரசு சேவை எண் ‘9552300009’ நம்பருக்கு ‘Hi’ என மெசேஜ் செய்யுங்கள். சேவைகள் அடங்கிய மெசேஜ் வரும். அதில், TTD temple service-ஐ தேர்வு செய்து, தேதி & நேரத்தை தேர்வு செய்து டிக்கெட்டை புக் செய்யலாம். கட்டணத்தை செலுத்திய பிறகு, டிக்கெட் மெசேஜ் வந்துவிடும். இந்த பதிவை அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 5, 2026
கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி

கூட்டுறவு & நகைக் கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதி எப்போது வெளியாகும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதனிடையே, 5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளின் பயிர்க் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். இந்நிலையில், திமுக, அதிமுக தரப்பில் கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி வெளியாகும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த முறை 5 சவரன் நகைக்கடனை திமுக தள்ளுபடி செய்தது.
News March 5, 2026
தவெகவுடன் கூட்டணி.. ராகுலை தடுத்தாரா கார்கே?

தவெகவுடன் கூட்டணி அமைத்தால் இளைஞர்களின் ஆதரவை பெறுவதோடு, TN-ல் காங்கிரஸை வலுப்படுத்தலாம் என ராகுல் காந்தி கணக்கிட்டாராம். ஆனால், தேர்தல் நேரத்தில் கூட்டணியை முறிக்க கூடாது; மத்தியில் பாஜக அரசை எதிர்கொள்ள திமுக MP-க்களின் பலமும் தேவை என ராகுலிடம் கார்கே கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தவெக தனது வாக்குவங்கியை நிரூபித்தால், அடுத்த தேர்தலில் கூட்டணி குறித்து பார்க்கலாம் என கார்கே கூறினாராம்.


