News August 26, 2024

சாலை விபத்தில் 5ஆம் வகுப்பு மாணவன் பலி

image

விக்கிரவாண்டி அடுத்த அசோகபுரி பகுதியைச் சோ்ந்தவா் கலையரசன். இவரது மகன் புவனேஸ்வரன் (10) நேற்று காலை தனது அத்தையுடன் விழுப்புரம்-செஞ்சி சாலையில் நின்று கொண்டிருந்தாா். அப்போது, விழுப்புரத்திலிருந்து செஞ்சி நோக்கிச் சென்ற காா் இருவா் மீதும் மோதியது. இதில், புவனேஸ்வரன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். செல்வி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Similar News

News March 8, 2026

விழுப்புரம்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக் <<>>செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News March 8, 2026

விழுப்புரம்: மகளிருக்கு இந்த எண் அவசியம்!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு சார்பாக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதேனும் பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 8, 2026

விழுப்புரத்தில் தட்டித் தூக்கிய திமுக!

image

மயிலம் சட்டமன்ற தொகுதி, முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் அதிமுக விளங்கம்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் SST. சங்கர் மற்றும் OPS அணியினர் உட்பட 500க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

error: Content is protected !!